தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Saturday, August 30, 2008

நல்லூர் கந்தனின் தேரோட்டமும் பறவைக்காவடியும் ! - படங்கள்

"கந்தனுக்கு அரோகரா" எனும் ஓசை வானைப் பிளக்க நல்லூர் கந்தனின் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

அங்காங்கே நல்லூரானின் பக்தர்கள் அங்கப் பிரதட்சணை செய்தும், கற்பூர தீச்சட்டி ஏந்தியும் மற்றும் பறவைக் காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
















Wednesday, August 13, 2008

உடப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம்




இலங்கையில் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளத்தை அண்டியுள்ள உடப்பு எனும் நெய்தல் கிராமத்தில் குடிகொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பூமிதிப்பு எனப்படும் தீமிதிப்பு வைபவம் இன்று காலை இடம்பெற்றது.

உடைப்பங்கரை என்பது உடைப்பு என்றாகி பின் அது மருவி உடப்பு என வந்தது எனக் கூறப்பட்ட இக் கிராம ஆலயத்தின் மூல மூர்த்தியாக ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமான் வீற்றிருந்தாலும் அர்த்த மண்டபத்தில் திரௌபதி அம்மனுக்கே தீமிதிப்பு விழா எடுக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 தினங்கள் விழா நடத்தப்பட்டு இன்றைய இறுதி உற்சவத்துடன் முடிவுற்றது. மரபைத் தழுவி பாரதக் கதையையொட்டி நடத்தப்படும் இவ்விழாவில் நிகழும் நடிப்புக்கள் உணர்வுரீதியாக காணப்படும்.

திரௌபதி அம்மனுக்கு முன்னாலிருக்கும் தூண்டாமணி விளக்கின் சுடரில் இருந்து அதிகாலையில் தீமிதிப்புக்கான மூலத்தீ எடுக்கப்பட்டு 20 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட வெட்டப்பட்ட குழியினுள் நிரப்பிய புளியமர விறகுகளில் தீ வளர்க்கப்படும், பின் பிற்பகல் மூன்று மணியளவில் துரியோதனன் - வீமன் யுத்த பாரதக்கதை படிக்கப்பட்டு வீமனின் கதாயுதத்தால் கால் தொடையெலும்பு முறிந்து வீழ்ந்து கிடக்கும் துரியோதனிடம் சபதம் முடிக்கவென மகாவிஷ்னுவின் துணையுடன் திரௌபதை சென்று துரியோதனனின் மார்பைப் பிளந்து அதில் வரும் குருதியை திரௌபதையாக பாவனை செய்யும் ஆலய பூசகர் தனது தலையில் பூசி சபதத்தை முடிக்கும் "பழுகளம்" எனும் காட்சி தத்துரூபமாக வருடா வருடம் நினைவூரப்பட்டு வருகின்றது.

Monday, August 11, 2008

தீ மிதிப்பு சடங்கு - 3

மட்டக்களப்பு காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிப்பு வைபவம் 04.07.2008

மடு மாதாவுக்கு தூய்மைச் சடங்கு !

ஸ்ரீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் அகோர சண்டை ஏற்பட்டு வரும் இவ்வேளையில் மன்னார் பிரதேசம் ஸ்ரீலங்கா படையினர் வசமானது, இதனைத் தொடர்ந்து மடு மாதாவுக்கு பாதுகாப்பில்லை எனும் காரணத்தினைக் காட்டி மடு மாதா திருச்சொரூபம் வன்னியிலுள்ள தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது.




பாதுகாப்புக் காரணத்தினைக் காட்டி மடுவுக்குச் சொந்தமான மாதாவை தேவன்பிட்டிக்குக் கொண்டு சென்றது ஏற்புடையதல்ல, திரும்பவும் மடு மாதா திருச்சொரூபத்தை மடுவுக்கு கொண்டு செல்லுங்களென கத்தோலிக்கர்கள் பலர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க திரும்பவும் மன்னார் ஆயர் இல்லத்தில் மடு மாதா திருச்சொரூபம் கொண்டு வைக்கப்பட்டது.

மடு மாதாவின் திருச் சொரூபம் அங்கிருந்து நேற்று முந்தினம் மடு தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது, இன்று காலை தூய்மைச் சடங்குடன் ஆசீர்வதிக்கப்பட்டு அன்னையின் திருச்சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.